வேலை தேடுவோர் - வேலைவாய்ப்பு அளிப்போர் சந்திக்க வலைதளம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேலை தேடுவோர் - வேலைவாய்ப்பு அளிப்போர் சந்திக்க வலைதளம்

வேலை தேடுபவர்களையும், வேலைவாய்ப்பு கொடுப்பவர்களையும் இணைக்கும் வகையில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் எம்எஸ்எம்-இ சம்பர்க் வலைதளம் செயல்பட்டு வருகிறது.




இந்திய தொழில் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்தப் பிரிவு தொழில் நிறுவனங்கள் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீத அளவு பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 45 சதவீத பங்களிப்பைச் செய்கிறது. எனவேதான் மத்திய, மாநில அரசுகள் இத்தகைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக பல்வேறு மானிய, கடனுதவி திட்டங்கள், சலுகைகளை வழங்கி வருகின்றது.




மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம், திறன் மிகுந்த (ஸ்கில்டு) வகையைச் சேர்ந்த வேலை வாய்ப்பு தேடுவோர், வேலை வாய்ப்பு அளிப்போரை ஒருங்கிணைக்கும் வகையில் வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அது சம்பர்க்-எம்எஸ்எம்இ என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. இந்த வலை தளத்தில் வேலை தேடுபவர்களும், வேலை வாய்ப்பு தருபவர்களும் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதில் தங்களுக்கென தனியாக இணையதள உள்ளீட்டுக் கணக்கைத் துவங்க வேண்டும். அந்த உள்ளீட்டுக் கணக்கு மூலம் வலை தளத்திற்குள் சென்று, வேலை தேடுபவர்கள் தங்களுக்கு உரிய வேலையையும், வேலை வாய்ப்பு அளிக்கும் நிலையில் உள்ள நிறுவனர்கள் தங்களுக்குத் தேவையான பணியாட்களையும் தேர்வு செய்து கொண்டு பயனடையலாம்.


இந்த வலைதளத்தில் இதுவரை, வேலை தேடுபவர்கள் 4.46 லட்சம் பேரும், வேலை வாய்ப்பு தருபவர்கள் நான்காயிரம் பேரும் பதிவு செய்து கொண்டுள்ளனர்.


மேலும் விவரங்களுக்கு:
http://sampark.msme.gov.in Email: samparkmsme@gov.in
கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்: 18001237376

No comments:

Post a Comment

Please Comment