சைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு

உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகரில், பாதுகாப்பு அமைச்சகத்தின், சைனிக் பள்ளி செயல்படுகிறது. இதில், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 





இதன்படி, 2019 - 20ம் கல்வியாண்டுக்கு, ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு, 2019, ஜன., 6ல் நடக்கும். ஒன்பதாம் வகுப்புக்கு, ஆங்கில வழியிலும், ஆறாம் வகுப்புக்கு, ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழியிலும் தேர்வு எழுதலாம். மேலும், ஆறாம் வகுப்பு தேர்வை தமிழில் எழுத, அமராவதி நகர் தேர்வு மையத்தை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை, &'ஆன்லைன்&' மூலமே சமர்ப்பிக்க வேண்டும். www.sainikschooladmission.in, www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.நவ., 26, 2018 வரை நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, 04252 - 256246 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment