குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகளில் அதிக கவனம் தேவை..!!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகளில் அதிக கவனம் தேவை..!!!

குழந்தைகளுக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன் மிகவும் குறைவே. இதனால் அவர்களை எளிதில் நோய் தொற்றுகள் தாக்கி விடும். அவர்களுக்கு கொடுக்கும் மருந்துகள், மாத்திரைகள் அனைத்திலும் கவனம் கொண்டு கொடுக்க வேண்டும்.



குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி போன்ற குறைகளுக்கு கொடுக்கப்படும் டானிக் மருந்துகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



சிறுவர்களுக்கு ஏற்படும் இருமலுக்கு கொடுக்கும் கொடைன் என்ற நிறமி இருக்கும் மருந்துகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.


குழந்தைகள் ஆரோக்கியத்தில் பெற்றோருக்கு இருக்க வேண்டிய கவனம்!



குழந்தைகளுக்கு வாங்கும் மருந்துகளில் கொடைன் (Codeine), டிரமடால் (Tramadol) போன்ற குறிப்புகள் இருக்கிறதா என்று கவனித்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அதனை கொடுக்க கூடாது.



உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள் :


குழந்தைகளின் உடலில் இருக்கும் எதிர்ப்பு திறன் குறைவு என்பதால் மூச்சு திணறும். இது உயிர்க்கு ஆபத்தை ஏற்படுத்தும்.


எப்.டி.எ அறிக்கையில் இதனை 12 வயதிற்கு உட்பட்டவர்கள் கண்டிப்பாக எடுத்து கொள்ள கூடாது என்பதே.


உடலில் இருக்கும் வலிகளை போக்கும் வலி நிவாரணியாக பயன்படுவது போலவே அதனால் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.


நுரையீரலில் கோளாறுகள் உண்டாகும், சுவாச உறுப்புகளை பாதித்து இறப்பை ஏற்படுத்தும்.


சிலரிடம் அல்ட்ரா ரேபிட் மெட்டபாலிசம் காண பட்டால், அவர்கள் இந்த மருந்துகளை உட்கொண்டால் விரைவில் பாதிப்புக்கு உள்ளாகி, உயிரை பறிக்கும் ஆபத்தை கொண்டது. பிரசவத்திற்கு பிறகு பெண்கள் இந்த மருந்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் மருத்துவரின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.


மருத்துவரின் ஆலோசனை இன்றி இந்த மருந்துகளை எடுத்து கொண்டதால் இழப்பு சதவிகிதம் உயருகிறது.

No comments:

Post a Comment

Please Comment