சிறப்பு துணைத் தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிறப்பு துணைத் தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

'பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுதியவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.






பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்களே, 'ஆன்லைன்' மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.தற்போது, மேல்நிலை தேர்வெழுதிய (மறு கூட்டல் மற்றும் மதிப்பீடு உள்பட) தேர்வர்களும், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய (மறு கூட்டல் உள்பட) தேர்வர்களும், அசல் மதிப்பெண் சான்றிதழை நாளை, 3ம் தேதி முதல், தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.நிரந்தர பதிவெண் கொண்ட தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில், சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுதி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின்; 






அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு, தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.இத்தகவலை, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். .

No comments:

Post a Comment

Please Comment