உலக மனநல தினம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலக மனநல தினம்

உலக மனநல தினம்



ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 10ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மனநலக் கல்வி விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.



மனநலக் குறைபாடு என்பது உலகம் முழுவதிலும் காணப்படும் பொதுவான ஒன்றாகும். ஒருவர் சிந்திக்கும் திறன் , செயற்படும் விதம் என்பனவற்றை மனநோய் பாதிக்கின்றது. இதன்காரணமாக கவனத்திறன் , மனஒருமைப்பாடு, ஒருங்கிணைக்கும் ஆற்றல் , தொடர்புகொள்ளுதல் ஆகியவற்றில் பிரச்சினைகள் உருவாகின்றன. இதனால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைகின்றது.



 இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மன நல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது.மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது. மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் விளக்குதல், முறையாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.



1992 ஆம் ஆண்டு முதன்முதலில் உலக மனநல நிலையத்தினால் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த அமைப்பில் 150ற்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம்வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment