நல்ல சீண்டல் மற்றும் தவறான சீண்டல் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு வேப்பேரி காவல் நிலையத்தில் போலீசார் அறிவுரைகள் வழங்கினர். சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளி குழந்தைகள் மற்றும் சிறுமிகள் அதிகளவில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு நாளும் 5க்கும் மேற்பட்ட புகார்கள் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் தவறான சீண்டல்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு நல்ல சீண்டல் மற்றும் தவறான சீண்டல் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தி அறிவுரை வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வேப்பேரி காவல் நிலைய இன்ஸ்ெபக்டர் வீரக்குமார் முதற்கட்டமாக சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து 50க்கும் ேமற்பட்ட பள்ளி குழந்தைகளை நேற்று காலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்களிடம், நல்ல சீண்டல் என்றால் என்ன? தவறான சீண்டல் என்றால் என்ன? என்பது குறித்து ஒரு மணி நேரம் வகுப்புகள் எடுத்து அறிவுரை வழங்கினார். அப்போது, காவல் நிலையம் என்றால் என்ன? அங்கு என்ன பணிகள் நடைபெறுகிறது என்று பள்ளி குழந்தைகளுக்கு புரியும் படி போலீசார் எடுத்துரைத்தனர். நல்ல சீண்டல்கள் மற்றும் தவறான சீண்டல்கள் என்றால் என்ன? அறிமுகம் இல்லாத நபர், தவறான சீண்டலுக்கு எப்படி அழைப்பார் என்று விளக்கினர்.
அப்போது, பள்ளி குழந்தைகளிடம் விளையாடுவது போலும், சாக்லெட், திண்பண்டங்கள் கொடுத்து தனியாக அழைத்து செல்வார்கள். அப்படி அழைத்து செல்லும் நபர்களிடம் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்று பல அறிவுரைகள் வழங்கினர். மேலும், தவறான சீண்டலின் போது பெற்றோர்களுக்கு தெரிவிப்பது? பள்ளி வேன் மற்றும் பள்ளியில் இருந்து தனியாக நடந்து வரும் போது யாரேனும் அறிமுகம் இல்லாத நபர்கள் அழைத்தால், அவர்களிடம் எப்படி அனுகுவது, அவர்கள் குறித்து மற்றவர்களிடம் எப்படி புகார் தெரிவிப்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

No comments:
Post a Comment
Please Comment