தேவையில்லாத மருத்துவ சோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்காதீர் ஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தேவையில்லாத மருத்துவ சோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்காதீர் ஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை

தேவையில்லாத மருத்துவ சோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என்று மருத்துவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை வழங்கினார்.



புதுச்சேரியில் ஜிப்மர் மருத் துவக் கல்லூரியின் 9-வது பட்ட மளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தலைமை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்றார்.


இவ்விழாவில் 466 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி அவர் பேசியது: கல்வியில் புதுமையை புகுத்துதல், நோயாளி கள் சார்ந்த ஆராய்ச்சி, மக்களின் சுகாதாரம் மற்றும் உயர்ந்த சேவை போன்றவற்றை தொலை நோக்கு சிந்தனையாக கொண்டு செயல்பட நீங்களே இலக்கு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும்.


மதம், மொழி, கலாச்சாரம் என அனைத்திலும் வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்தியர்கள். அதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

புன்னகையுடன் அணுகுங்கள்

தேவையில்லாத மருத்துவ சோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்காதீர்கள். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை புன்னகை யுடன் அணுகுங்கள். வெறும் ஆய்வக முடிவுகளை கொண்டு அவர்களை அணுகாமல் சிறிது நேரமாவது ஆறுதலுடன் பேசி மனதளவில் தெம்பூட்டி மருந்து களை பரிந்துரையுங்கள்.

தற்போது உடல் உழைப்பு குறைந்துள்ளது. யோகா, சூரிய நமஸ்காரம், விளையாட்டுகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்துங்கள். வெளிநாட்டு மற்றும் துரித உணவு களைத் தொடர்ந்து சாப்பிடுவதை தவிருங்கள் என அறிவுறுத் துங்கள்.

‘ஜன் ஆரோக்யா' திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தி னால் இந்திய மருத்துவ சேவையில் பெரும் புரட்சி ஏற்படும்.

மோடியின் 3 மந்திரங்கள்

பிரதமர் மோடியின் 3 மந்தி ரங்களான சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகிய மூன்று மந்திரங் களை கொண்டு இளையோர் செயல்படுவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா கவுரவ விருந்தினராக பங்கேற் றார்.இந்நிகழ்வில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல் வர் நாராயணசாமி, ஜிப்மர் தலைவர் மஹாராஜ் கிஷன் பான் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங் கேற்றனர். பட்டமளிப்பு விழா நடை பெற்ற விழா அரங்குக்கு செல்ல பெற்றோருக்கு அனுமதியில்லை அவர்களுக்காக ஜிப்மரில் கருத் தரங்கு அறையில் பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

No comments:

Post a Comment

Please Comment