அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன?




அண்டார்டிகாவில் 30 கிலோமீட்டர் நீளமுள்ள பனிப்பாறை ஒன்று உடைந்திருக்கிறது. ஸ்டெஃப் லியர்மெட் (Stef Lhermitte) என்ற புவியியல் விஞ்ஞானி செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வந்ததன் மூலமாக இதைக் கண்டறிந்திருக்கிறார். இந்தப் பனிப்பாறை 30 கிலோமீட்டர் நீளமும், பத்து கிலோமீட்டர் அக



Read this >பள்ளியில் கழிவறை கட்ட விருது பணம் 50,000 தந்த ஆசிரியர்!




லமும் அளவு கொண்டது. இவ்வளவு பெரிய பனிப்பாறையினால் அண்டார்டிகாவின் கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்புகள் இருக்கும் என் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த வருடமும் இதே போல ஒரு பனிப்பாறை உடைந்தது. அண்டார்டிகா பகுதியில் இருக்கும் பைன் தீவு பனிப்பிரதேசத்தில்த்தான் இது போன்ற பாதிப்புகள் அதிகமாக நிகழ்கின்றன.



இந்தப் பகுதியில் மட்டுமே ஒரு வருடத்திற்கு 45 பில்லியன் டன் அளவில் பனி உருகுவதாகக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலமாக, ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கும் கடல் மட்டம் 1 செ.மீ அளவில் உயர்கிறது எனவும் ஒரு வேளை இது முழுவதுமாக உருகினால் கடல் நீர் மட்டம் 1.7 அடிக்கு மேல் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2001-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற மிகப் பெரிய பனிப்பாறை உடைப்புகளில் இது ஆறாவதாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment