ப்ளேஸ்டோரில் செயலியை பதிவிறக்கம் செய்யும் நபர்கள் கவனம்.!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ப்ளேஸ்டோரில் செயலியை பதிவிறக்கம் செய்யும் நபர்கள் கவனம்.!!





நமது அலைபேசியில் அனைத்து செயலியையும் பதிவிறக்கம் செய்து அனைத்து செயலிகளையும் தங்களின் அலைபேசியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் நான் ஒத்துழைக்கிறேன் என்று அனுமதி வழங்குகிறோம். தேவையான செயலிகளை தேவையான அனுமதி மட்டும் வழங்கும் பட்சத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.




தொடுதிரை அலைபேசிகள் வைத்திருக்கும் அனைவரும் பயன்படுத்தும் செயலி என்றால் கூகிள் ப்ளேஸ்டோர். இந்த செயலியை தனது அலைபேசியில் வைத்திருப்பவர்கள் இதன் மூலமாக பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்துகொள்வார்கள்.





ஏனெனில் இந்த செயலியின் மூலமாக பல்வேறு வகையான நமக்குத் தேவையான செயலியை விரைவாக பதிவிறக்கம் செய்கிறோம். அந்த வகையில் நாம் அந்தi செயலிகளை பதிவிறக்கம் செய்யும் பொது அனைத்து விதமான நிபந்தனைக்கும் தயாரா? மற்றும் தங்களின் அலைபேசியில் உள்ள பிற செயலிகளில் உட்புக அனுமதி கேட்கும்.


அந்த செயலியானது கேட்கும் அனைத்து விதமான நிபந்தனைக்கும் நாம் சரி அல்லது நான் அனுமதிக்கிறேன் என்று அனுமதி வழங்கியிருப்போம். எந்த விதமான செயலியை பதிவிறக்கம் செய்தலும் அணைத்து நிபந்தனைக்கும் சரி என்று உறுதியளித்துடன் செயலியானது பதிவிறக்கம் செய்யப்படும்.





அவ்வாறு அளிக்கப்படும் அனைத்து ஒப்புதலின் பேரில் நமது தகவல்கள் அனைத்தும் கூகிள்., பேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நமது தகவல்கள் கூகிள்., முகநூல்., ட்விட்டர்., மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.


மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக கூகிள் நிறுவனமானது வெளியிட அறிவிப்பில்., பிளேஸ்டோரில் உள்ள செயலிகள் எதிர்பாராத சூழ்நிலையில்., செயல்படாமல் போகும் பட்சத்தில்., தகவலை அறிவிப்பதற்காக உள்ள வழக்கமான சேவைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment