சச்சின் எழுதிய அந்த ஒரு கடிதத்தால் ஸ்கூலில் சூப்பர் ஸ்டாரான சிறுவன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சச்சின் எழுதிய அந்த ஒரு கடிதத்தால் ஸ்கூலில் சூப்பர் ஸ்டாரான சிறுவன்


நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது குட்டி ரசிகர் எழுதிய கடிதத்துக்கு பதில் எழுதியதால் அந்த குட்டி ரசிகர் இப்போது அவரின் ஸ்கூலில் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார்.





கேரள மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் சச்சின் டெண்டுல்கருக்கு அண்மையில் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், "அன்புள்ள சச்சின், நீங்கள் எனது பள்ளி வழியாக எப்போதாவது சென்றீர்கள் என்றால் என் பள்ளிகு வர வேண்டும். அப்புறம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் இருக்கும் சில வீணான வீரார்களை நீக்க வேண்டும்" என எழுதியிருந்தார்.



5-ம் வகுப்பு படிக்கும் மிதுன் மேனன் என்ற அந்த சிறுவனுக்கு உடனே பதிலளித்தார் சச்சின் டெண்டுல்கர். அதுவும் தனது கைப்படவே அந்தக் கடிதத்தை எழுதி அனுப்பியிருக்கிறார்.

அன்புள்ள மிதுன்,




இது எனது வாழ்வின் இரண்டாவது இன்னிங்க்ஸ். இதில், நான் பயணங்களால் பரபரப்பாக இருக்கிறேன். எனக்கு நேரம் கிடைத்தால் உனது பள்ளிக்கு வருகிறேன். எனது வலிமையே உன்னைப் போன்ற குட்டி ரசிகர்கள் அளிக்கும் உற்சாகம்தான். வாழ்த்துகள். எனது அன்பின் அடையாளமாக, எனது கையெழுத்திடப்பட்ட புகைப்படத்தை நான் அனுப்புகிறேன்.


இவ்வாறு சச்சின் அந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார்.


இந்த கடிதத்தால் மிதுன் அவர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். எல்லோரும் அந்தக் கடிதத்தை ஆவலுடன் பார்த்து வருகின்றனராம்.

No comments:

Post a Comment

Please Comment