அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், தர்மபுரியில் நடந்தது.

கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து பேசினார். மாணவர்களுக்கு, குளோரின் கலந்த குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளில் குடிநீர் தொட்டி, கழிவறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். கொசுமருந்து அடிக்க வேண்டும்; மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இணைப்பு இல்லாத பள்ளிகளுக்கு, இணைப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சி.இ.ஓ., ராமசாமி, துணை இயக்குனர் (சுகாதாரம்) ஜெகதீஸ்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
Please Comment