தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் 5 ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 5 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 10 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிக்கைக்காக தங்களது சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏதுவாக பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்கள் என அனைத்துக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து தீபாவளிக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment