இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் பன்முகத்தன்மை கொண்ட உலகத்தை உருவாக்க முடியாது என்று ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனி குட்ரெஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஐநா சபைக்கான இந்திய அலுவலகத்தை டெல்லியில் நேற்று திறந்து வைத்து பேசிய அவர்,பன்முகத்தன்மை என்ற அடிப்படைத்தூணின் மீது இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதே நேரம் பன்முகத் தன்மை என்பதை உலகிற்கும் இந்தியா வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட குட்ரெஸ், இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் பன்முகத் தன்மை கொண்ட உலகத்தை உருவாக்க முடியாது என்றும், இந்தியாவின் வெற்றிக்கு அதுவே காரணம் என்றும் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து இந்திய அரசின் நலத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நாடுகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு இந்தியா வந்துள்ள அவர், சர்வதேச தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்

No comments:
Post a Comment
Please Comment