பள்ளி கல்வித் துறையில் மூன்று இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக பள்ளி கல்வித் துறை திங்கள்கிழமை பிறப்பித்தது. அதன்படி, இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக இருந்த பூ.ஆ.நரேஷ், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் எஸ்.நாகராஜ முருகன், பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குநராகவும் (பணியாளர் தொகுதி), தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) கே.ஸ்ரீதேவி, மெட்ரிகுலேசன் பள்ளி இயக்கக இணை இயக்குநராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment