ரயில் நேரம், ரயில் வந்து கொண்டிருக்கும் இடம் தெரிந்து கொள்ள நிறைய தனியார் ஆப்கள் இருந்தாலும் அவை கொடுக்கும் தகவல் துல்லியமாக இல்லை என்ற புகாரை பயணிகள் அடிக்கடி வைத்துக் கொண்டே இருந்தனர்.
இதனையடுத்தே, ரயில்கள் வரும் தகவல், இருக்கை விவரம், பி.என்.ஆர். விவரம், பல்வேறு உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவைகளை உள்ளடக்கிய 'ரயில் பார்ட்னர்' எனும் புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பங்கேற்று செயலியை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் பேசிய று தெற்கு ரயில்வே பொது மேலாளர் சென்னை- மதுரை இடையே பகல் நேர விரைவு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.
ஆப்பில் உள்ள வசதிகள் என்னென்ன?
இந்த ஆப்பை பார்வை சவால் கொண்டவர்களும்கூட எளிதல் பயன்படுத்தலாம். ஸ்மார்ட் ஃபோன்கள் மூலம் டாக் பேக் வசதியைப் பயன்படுத்தி இந்த ஆப்பை அவர்கள் உபயோகிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் 20 விதமான ஹெல்ப்லன்களை அழைக்க இந்த ஆப்பில் டைரக்ட் கால் வசதி உள்ளது. இந்த அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து ஒரு முறை ரெஜிஸ்டர் செய்துவிட்டால் போதும் இதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது ஆன்லைன், ஆஃப்லைனில் வேலை செய்யும்.

No comments:
Post a Comment
Please Comment