ஒரே மாதிரியான திருமண வயதுக்கு பரிந்துரை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஒரே மாதிரியான திருமண வயதுக்கு பரிந்துரை


'குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், ஆணுக்கும், பெண்ணுக்கும், ஒரே மாதிரியான திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும்' என, தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.









குழந்தை திருமணம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் முடிவில், பல்வேறு பரிந்துரைகளை, ஆணையம் பட்டியலிட்டு உள்ளது. மத்திய சட்ட அமைச்சகம், குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சகம் ஆகியவற்றுக்கு, இந்தப் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; அதில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டத்தின்படி, ஆணுக்கான திருமண வயது, 21 ஆகவும், பெண்ணுக்கான திருமண வயது, 18 ஆகவும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், இந்த வயது நிர்ணயிக்கப்பட்டது.தற்போதுள்ள காலத்தில், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான திருமண வயதில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இருவருக்கும் பொதுவான, ஒரே திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும். குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு இது உதவும். கர்நாடகாவில் உள்ளதுபோல், ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒரு குழந்தை திருமணம் தடுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.









இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள், அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.'ஆண் மற்றும் பெண்ணுக்கான, திருமண வயதை, 18 ஆக நிர்ணயிக்கலாம்' என, 2008ல், மத்திய சட்ட கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.

No comments:

Post a Comment

Please Comment