பொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பல்வேறு பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், வினாத்தாள் தயாரிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.





இந்த முறை, பாடத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, உள்பக்க கேள்விகள், உதாரண கேள்விகள் என, அனைத்தும் சம அளவில் இடம் பெறும் வகையில், வினாத்தாள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, வினாத்தாள் கட்டமைப்பு என்ற, &'ப்ளூ பிரின்ட்&' முறை ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே, பாடத்தின் உள்பக்கத்தில் இருந்து, எந்த கேள்வியும் இடம் பெறலாம். ஒவ்வொரு பாடத்துக்கும், 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உதவியுடன், வினாக்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றில் முக்கிய கேள்விகளை தேர்வு செய்து, வினாத்தாள் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக, பள்ளி கல்வி மற்றும் தேர்வு துறை வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment

Please Comment