உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்தில், பள்ளி விபரங்களை ஆன்-லைன் பதிவேற்றம் செய்யும் 'சாலாசித்தி', பணிகள் துவங்கியுள்ளன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் சார்பில், கல்வியாண்டு தோறும், பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர் விபரங்கள் சரிபார்க்கப்படும்.
கடந்தாண்டு முதல், பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை உட்பட கூடுதல் தகவல்களுடன், அனைத்து விபரங்களையும், மத்திய மற்றும் மாநில இயக்குனரகங்கள் நேரடியாக ஆன்-லைனில் பார்வையிட்டுக்கொள்ள 'சாலா சித்தி', திட்டம் கொண்டுவரப்பட்டது.இத்திட்டத்தில், பள்ளியிலுள்ள வகுப்பறைகள், ஆசிரியர்களின் முழுமையான விபரம், மாணவர்களின் கல்வித்தரம் உள்ளிட்ட தகவல்களை ஆன்-லைன் மூலம், பதிவேற்றம் செய்கின்றனர்.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை துவக்கியுள்ளனர்.

No comments:
Post a Comment
Please Comment