தில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க தேனியைச் சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தில்லியில் வரும் ஜனவரி மாதம் தேசிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்க நீச்சல் வீரர்கள் தேர்வு செவ்வாய்க்கிழமை (அக்.9) சென்னையில் நடைபெற்றது. இத்தேர்வு போட்டியில் தேனி மாவட்டம் சார்பில் 9 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், தேனியைச் சேர்ந்த ஆர்.கே.நிர்மல் குமார் 17 வயதுக்குள்பட்டோர் பிரிவிலும், ஆர்.நித்தீஸ்குமார், எஸ்.குணபாலன், எஸ்.நேசகுமார், எம்.யு.ஜாய்ஸ்ரீ ஆகியோர் 14 வயதுக்குள்பட்டோர் பிரிவிலும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ், நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Please Comment