7 ஆண்டுகளாக கேரம் போட்டியில் சாதனை படைக்கும் அவ்வூர் ஆரம்பப் பள்ளி
https://thulirkalvi.blogspot.com/
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக கேரம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு அவ்வூர் அரசினர் தொடக்கப்பள்ளி தேர்வாகி சாதனை படைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே அவ்வூர் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எண்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பெரும்பாலும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் முதல் தலைமுறை கல்வி கற்கும் ஏழை மாண்வர்களே இப்பள்ளியில் படிக்கின்றனர். சில பழங்குடி மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
அவ்வூர் பள்ளி மாணவர்கள் பேச்சு, ஓவியம், கவிதை, பறையிசை, சிலம்பம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும் திறன்களை வளர்த்து சாதித்து வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து கேரம் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் தகுதி பெற்று வருகின்றனர்.
உதகையில் நடைபெற்ற இந்தாண்டுக்கான கேரம் போட்டியில் அவ்வூர் பள்ளியைச் சேர்ந்த தமிழரசு (ஒற்றையர்), சுதீப், நிதிஷ் (இரட்டையர்), மாணவிகள் எழில்மதி (ஒற்றையர்), ரேஷ்மா, ராஜேஸ்வரி (இரட்டையர்) என 6 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி பல தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுடன் போட்டியிட்டு தொடர்ந்து ஏழாவது ஆண்டாக மாநில அளவில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Please Comment