சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
கடந்த 2012-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை ஏழாவது ஆண்டு பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
பிறந்த குழந்தை முதற்கொண்டு கற்பழிக்கப்பட்டு வரும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.

No comments:
Post a Comment
Please Comment