உபரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர் செய்ய உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உபரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர் செய்ய உத்தரவு

திண்டுக்கல் உட்பட 27 மாவட்ட தொடக்க, நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள உபரி பணியிடங்களை சரண்டர் செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




தமிழக பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதப்படி மாணவர்களின் எண்ணிக்கையை விட பல பள்ளிகளில் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர்.உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், காலியாகும் அந்த உபரி பணியிடத்தை அரசிடம் ஒப்படைக்க தொடக்கக்கல்வி இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ( சேலம், கோவை, திருவாரூர்,தேனி, கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக) உத்தரவிட்டுள்ளார்.அதில், 'உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் 2018 மே, 31ல் ஓய்வு பெற்றிருந்தால், அந்த இடங்களை மீண்டும் நிரப்ப கூடாது. விதிமுறைப்படி அதற்கான படிவத்தில் விபரங்களை பதிவு செய்து உடனே சரண்டர் செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment