Exam - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Exam

சிடிஎஸ் தேர்வு பயிற்சிக்கு முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் விண்ணப்பிக்கலாம்



சிடிஎஸ்- ஐஐ தேர்வுக்கான முன்பயிற்சிக்கு முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், ராணுவத்தில் அலுவலர்களாக பணி வாய்ப்புப் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், யுபிஎஸ்சி மூலம் நவ. 18 -ஆம் தேதி நடத்தப்படவுள்ள சிடிஎஸ் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு நவ. 7 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை முன்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.




சென்னை, முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்குத் தங்குமிடம், உணவு, சென்னை சென்று வருவதற்கான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் ஆகியன வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Please Comment