வேளாண் பல்கலையில் கணிப்பலகை தேர்வு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தாள் இல்லாமல் மின்னணு கணிப்பலகையில் தேர்வு எழுதும் முறை, இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் அனைத்து பல்கலைகளிலும் மாணவர்கள், தாளில் தேர்வு எழுதும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.தற்போது தாளில்லாத கணினித்திரையில் எழுதும், கணிப்பலகை (எக்சாம் பேடு) தேர்வு முறை, நாட்டில் முதல் முறையாக கோவை வேளாண் பல்கலையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வேளாண் பல்கலை தேர்வாணையர் இளமுருகு கூறுகையில், ''நடப்பு கல்வியாண்டு முதல் வேளாண் பல்கலை கீழ் செயல்படும், 42 வேளாண் கல்லுாரிகளிலும், தாளில்லா கணிப்பலகை தேர்வு முறை நடைமுறைக்கு வருகிறது. ''இந்த தேர்வு முறையில் மாணவர்களின் கைரேகை மற்றும் புகைப்படம், முதலிலேயே பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில், மின்னணு திரையில் தேர்வின்போது கேள்வித்தாள் வரும்.
No comments:
Post a Comment
Please Comment