மாணவர்களுக்கு ஐஏஎஸ் பட்டம் - புதுவித முயற்சியில் கலக்கும் அரசுப் பள்ளி!
கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில், ஒவ்வோர் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்பாகவும் மலர்கள், கனிகள், காய்கறிகள், மரங்கள் மற்றும் அறிஞர்களின் பெயர்களைச் சூட்டும் விழா நடைபெற்றது. அதேபோல, ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வு வைத்து, ஒரு ஐஏஎஸ், ஒரு ஐபிஎஸ் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்தான் இத்தகைய வியப்பூட்டும் முயற்சியைச் செய்திருக்கிறார்கள்.
மிகவும் பின்தங்கிய கிராமமான இந்த தொட்டியப்பட்டியில் உள்ள பள்ளி மாணவர்கள், நல்ல அடிப்படைக் கல்வியைப் பெற வேண்டும் என்ற உந்துதலில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி .பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
No comments:
Post a Comment
Please Comment