ரசகுல்லா தினமாகும் நவம்பர் 14 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரசகுல்லா தினமாகும் நவம்பர் 14

வரும் நவம்பர் 14ஆம் தேதியை ரசகுல்லா தினமாக கொண்டாட மேற்கு வங்க அரசு தீர்மானித்துள்ளது.






ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் பிரபலமாக உள்ளன. உதாரணத்துக்கு கர்நாடக மாநிலத்தில் மைசூர் பட்டு, தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் பட்டு மற்றும் மதுரை சுங்கடி சேலை ஆகிய துணி வகைகள், இமாசலப் பிரதேச தேநீர், கூர்க் ஆரஞ்ச் போன்றவைகளை சொல்லலாம்.



அந்த பொருட்களுக்கு பூகோள குறியீடு என்னும் ஜிஐ மார்க் (GEOGRAPHICAL INDICATION) அளிக்கபட்டு வருகிறது.



அவ்வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி மேற்கு வங்க இனிப்பான ரசகுல்லாவுக்கு ஜிஐ மார்க்கை உலக வர்த்தக கழகம் அளித்தது.வரும் நவம்பர் மாதம் இந்நிகழ்வு முடிந்து ஓராண்டாகிறது. இதை விமரிசையாக கொண்டாட மேற்கு வங்க அரசு தீர்மானித்துள்ளது.
கொல்கத்தா நகரில் மஸ்தி ஹப் என்னும் பெயரில் அரசு சார்பில் மாபெரும் இனிப்பு கண்காட்சியகம் உள்ளது. இந்த கண்காட்சியகம் கொல்கத்தா நகரில் நியூடவுன் பகுதியில் உள்ள இகோ பார்க் வளாகத்தில் உள்ளது. இங்கு உலகெங்கும் உள்ள இனிப்புக்கள் விற்பனைக்கு கிடைக்கும்.


வரும் நவம்பர் 14 ஆம் தேதி அரசு சார்பில் ரசகுல்லா தினம் கொண்டாட்டம் நடைபெற உள்ளதால் மஸ்தி ஹப் அன்றைய தினம் பலவகை ரசகுல்லா வை செய்து பார்வைக்கு வைக்க உள்ளது.


No comments:

Post a Comment

Please Comment