குரூப் 2 பதவியில் 1199 பதவி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப் 2 பதவியில் 1199 பதவி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2 பதவியில் 1199 பதவிக்கான எழுத்து தேர்வு ஹால் டிக்கெட்டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.






 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 2( நேர்முக தேர்வு பதவி) பதவியில் காலியாக உள்ள 1199 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அறிவித்தது. இப்பணிக்கான முதல்நிலை எழுத்து தேர்வு வருகிற 11ம் தேதி சென்னை உட்பட 32 மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கென 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment