மணிக்கு 44,500 மைல் வேகம்... செவ்வாய் கிரகத்தைக் கடந்த 'ஸ்டார்மேன்'! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மணிக்கு 44,500 மைல் வேகம்... செவ்வாய் கிரகத்தைக் கடந்த 'ஸ்டார்மேன்'!

கடந்த பிப்ரவரி மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட டெஸ்லாவின் கார், செவ்வாய் கிரகத்தைக் கடந்துசென்று சாதனை படைத்திருக்கிறது. ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட டெஸ்லாவின் ரோட்ஸ்டெர் காரில், ஸ்டார்மேன் என்ற செயற்கை மனிதனும் பொம்மையும் சேர்த்தே வைக்கப்பட்டுள்ளது. ஏவப்பட்டபோது ஆறு மாதத்தில் செவ்வாய் கிரகத்தை நெருங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், சில நாள்கள் கழித்து ரோட்ஸ்டெர் கார் திசை மாறியதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், தற்போது கணிக்கப்பட்டது போலவே ஆறு மாதத்தில் செவ்வாயைக் கடந்திருக்கிறது. இதைக் கடந்த 3-ம் தேதி எலான் மஸ்க் உறுதிசெய்திருந்தார்.





மேலும், இன்றைக்குத்தான் இருப்பதிலேயே அதிக தொலைவில் அந்த கார் இருக்கும்.அது, சூரியனிலிருந்து 155 மில்லியன் தொலைவில் மணிக்கு 44,500 மைல் வேகத்தில் விண்வெளியில் பாய்ந்து சென்றுகொண்டிருக்கும். இந்தக் கார், 557 நாள்களுக்கு ஒருமுறை நமது சூரியனைச் சுற்றிவரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், அடுத்த இரண்டு வருடம் கழித்து பூமிக்கு மிக அருகில் நெருங்கி வரும். அப்போது, அது பூமியிலிருந்து 32 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும்.




அதே நேரத்தில், அந்த வருடத்தில் செவ்வாய் கிரகத்தை இன்னும் அருகில் 4.6 மில்லியன் மைல்கள் தொலைவில் நெருங்கிச் செல்லும். அதற்கடுத்ததாக, 2091-ம் ஆண்டில்தான் இந்த கார் பூமியின் அருகே வரும். இந்த கார் எந்தக் கிரகத்திலும் மோதாமல் இருந்தால், பல மில்லியன் ஆண்டுகளுக்கு விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment

Please Comment