சீனாவில் ஊதா வரவேற்புடன் தொடங்கியது: 5வது உலக இணைய மாநாடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சீனாவில் ஊதா வரவேற்புடன் தொடங்கியது: 5வது உலக இணைய மாநாடு



சீனாவின் ட்சே சியாங்மாநலத்தின் வூஜென் நகரில் 5வது சர்வதேச இணைய மாநாடு தொடங்கியது. 





மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் இவ்வாண்டுக்கான தலைப்பு பரஸ்பர நம்பிக்கை மற்றும் கூட்டாட்சியின் கீழ் ஒரு டிஜிட்டல் உலகை உருவாக்குதல் என்பதாகும். சீனாவின் சைபர் ஸ்பேஸ் நிர்வாகம் மற்றும் ட்சேச்சியாங் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டி உலகம் முழுவதில் இருந்து ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.இம்மாநாட்டிற்காக இவ்வாண்டு தன்னார்வலர்கள் அனைவருக்கு நீல சீருடை அணிந்து மாநாட்டின் விருந்தினர்களை வரவேற்றனர். சீன பாரம்பரியத்தோடு, இணைய இணைப்பு மற்றும் வெற்றிக்கான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் நோக்கமாக இது கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக இம்மாநாட்டில் 5 ஜி தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, பட்டுச் சாலை போன்ற விசங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும் செயற்கை நுண்ணறிவு, 5 ஜி, பெரிய தரவு, இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் சில்க் சாலை போன்ற முக்கியமான தலைப்புகளில் கவனம் செலுத்தப்பட்டது. புதிய தொழில்நுட்பங்கள் 


Bio Mattric attendance for TN Teachers Click here to read



கொண்ட புதுமையான கண்காட்சி ஒன்றும் இம்மாநாட்டில் நடத்தப்படுகிறது. இதில் 25க்கும் மேற்பட நாடுகளில் இருந்து 430 க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த கண்காட்சி தொழில்நுட்பங்கள் இந்த உலகத்தை எப்படி மாற்றியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.முதல் நாள் நிகழ்வான இன்று இணையத்தின் ஒளி கண்காட்சி தொடக்க விழா, இனைய மாநாடு தொடக்க விழா, உலக முன்னணி இணைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் வெளியீட்டு விழா போன்றவை நடைபெற்றன.சமீப காலமாக சீனா டிஜிட்டல் தொழில்களில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், 5 ஜி.







தொழில்நுட்பம், மொபைல் இண்டர்நெட் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் குறிப்ப்டத்தகுந்த அளவில் ஏற்றம் கண்டுள்ளதை இம்மாநாடு எடுத்துக் காட்டியது. உலக அளவில் இணையப் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் சீனா முன்னிலை வகிக்கிறது. சுமார் 800 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு இணையம் முக்கியப் பங்கு வகிப்பதாக உலகெங்கும் உள்ள நாடுகள் பொதுவாக நம்புகின்றன. இதனால் இணைய பயன்பாட்டு வளர்ச்சிக்காக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த ஆண்டுதோறும் சீனா மற்றும் , வெளிநாடுகளிலிருந்து பல்வேறு பிரதிநிதிகள் அழைக்கப்படுகிறார்கள்.








இதில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் உலக டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் எவ்வாறு ஒத்துழைப்பதென்பது பற்றிய கருத்துகளையும் தங்கள் அனுபவங்களையும் பகிர்கின்றனர்.இம்மாநாட்டின் இரண்டாம் நாளான நாளை, தொழில் நுட்பம் மூலமாக ஒரு சமூகத்தை கட்டமைப்பது, நாகரிகங்களில் பரஸ்பர கற்றல்: ஆன்லைன் கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் பகிர்தல், இணையம் மூலம் , தொண்டு மற்றும் வறுமை ஒழிப்பு, 5 ஜி. தொழில் நுட்பத்தில் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு, புதிய சகாப்தத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்துவணிக தலைவர்கள் உரையாடல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment

Please Comment