உங்களது மகளின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தற்காப்பினை எவ்வாறு உறுதி செய்வது என்ற கவலையா? இதோ அது பற்றிய உரையாடலை தொடங்க 8 ஆலோசனைகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உங்களது மகளின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தற்காப்பினை எவ்வாறு உறுதி செய்வது என்ற கவலையா? இதோ அது பற்றிய உரையாடலை தொடங்க 8 ஆலோசனைகள்














இது உங்களது குழந்தையிடமிருந்து அவளது குழந்தைதனத்தை விலக்க கூடிய விஷயங்களாயிற்றே அதனை பற்றி எப்படி பேச்சை துவக்குவது எனற உங்களது குழப்பம் எங்களுக்கு புரிகிறது. ஆனால் உங்களது குழந்தையின் வெகுளித்தனத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள துடிக்கும் மோசமான எண்ணம் கொண்டவர்கள் தற்காலத்தில் அதிகரித்து வருவதை பார்க்கும்போது, இது பற்றி அவளை சிறு வயதிலேயே தயார் செய்வது அவசியமாகிறது. இது போன்ற 'நாசூக்கான' விஷயங்களை எப்படி சிறு பெண்ணிடம் "இவ்வளவு சீக்கிரம்" பேசுவது "எப்படி தொடங்குவது?" அல்லது "ஒருவேளை பயந்து விடுவாளோ? என்பது போன்ற தயக்கம் உங்களை தடுக்கக் கூடும். இது போன்ற சிக்கல்கள் குறித்து சிறு வயதிலேயே ஒரு தோழியை போல அன்புடன் விளக்கி விடுவது அவசியம். அந்த உரையாடலை தொடங்க பின்வறும் குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்.



தற்காப்பு என்றால் என்ன?


உங்களை ஒருவர் தாக்க அல்லது பயமுறுத்த தொடங்கும் போது அதிலிருந்து உங்களை நீங்களே காத்துக் கொள்ளும் வழியே தற்காப்பாகும். தற்காப்பு என்பது சொற்களின் மூலமோ அல்லது உடல் ரீதியாக எதிர்த்து போராடுவதாகவோ இருக்கலாம்.



தற்காப்பின் அவசியம் என்ன?

தவறான முறையில் அணுகுபவர்கள் அல்லது தனது செய்கையினால் உங்களுக்கு தர்மசங்கடமான உணர்வினை ஏற்படுத்துபவர்கள் ஆகியோரிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம். தைரியமாக மறுப்பு தெரிக்கவும் தேவைப்பட்டால் உடல் ரீதியாக எதிர்த்து போராட வேண்டியதும் அவசியமாகும்.


எப்போது நீங்கள் தற்காப்பு கலையை பயன்படுத்த வேண்டும்?


நாம் ஆபத்திலிருக்கும் போது இதை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக எச்சரிக்கை செய்யவும், அந்த இடத்திலிருந்து தப்பிக்கவும் அல்லது உதவியை தேடி பெறவும் இதனை பயன்படுத்தலாம்.

தற்காப்பின் 3 தங்கமான விதிகள்



  • எப்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் உங்களது உள்ளுணர்வை நம்பவேண்டும்.

  • உங்களது நடை மற்றும் பேச்சில் தன்னம்பிக்கை தெரிய வேண்டும். கண்களை பார்த்து பேசுங்கள்.

  • நீங்கள் ஒருவேளை தாக்கப்பட்டால் திரும்ப தாக்க தயாராக இருங்கள்.

ஏற்பட இருக்கும் ஆபத்தினை தடுக்க உதவும் 3 யுக்திகள்


  • தேவையற்ற செய்கைகள், தொடுதல் அல்லது அழைப்புகளுக்கு உறுதியாக 'நோ' சொல்லுங்கள்.

  • ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நடப்பது அல்லது பிரயாணம் செய்வதை தவிர்க்கவும்.

  • ஆபத்தை உணர்ந்ததுமே அந்த இடத்தை விட்டு உடனடியாக நகர்ந்து விடவும்.

தனிப்பட்ட எல்லையை வகுத்துக் கொள்ள உதவும் 3 வார்த்தைகள்

  • நிறுத்து.
  • தொடாதே.
  • போய் விடு.

ஒருவரை தாக்க சிறந்த 3 இடங்கள்



  • கண்கள். கண்களில் லேசாக உங்களது விரலால் குத்துவதால் உங்களை தாக்க வருபவர் நிலைகுலைந்து விடுவார்.

  • மூக்கு. மூக்கில் பலமாக உங்களது உள்ளங்கையினால் குத்துவதன் மூலம் உங்களை தாக்க வருபவரை தற்காலிகமாக நிலைகுலைய செய்யலாம்.

  • இடுப்பு. குறி வைத்து இங்கு உதைப்பதால் எதிராளி பின்னோக்கி விழுந்து அதற்குள் ஒரு பெண் தப்பித்து ஓடிவிட நேரம் கிடைக்கும்.

எளிதில் கற்கக் கூடிய 3 தற்காப்பு டெக்னிக்குகள்


  • கராத்தே.
  • களரிபயட்டு.
  • சிலம்பம்.

இவை வர இருக்கும் ஆபத்தினை அறிந்து எதிர்த்து போராட உங்களது ரிஃபெளெக்சை தயாராக வைக்க உங்களது மனதுக்கு பயிற்சியளிக்கிறது.


பொது இடத்தில் உங்களுக்கு உதவக்கூடிய 3 சக்தி வாய்ந்த சொற்கள் அல்லது வார்த்தைகள்


  • ஹெல்ப்!
  • எனக்கு இவரை யாரென்றே தெரியாதுI
  • பின்னால் போ

பொது இடத்தில் உங்களுக்கு உதவக்கூடிய 3 சக்தி வாய்ந்த சொற்கள் அல்லது வார்த்தைகள்


  • ஹெல்ப்!
  • எனக்கு இவரை யாரென்றே தெரியாதுI
  • பின்னால் போ

தனிப்பட்ட பாதுகாப்பு பற்றி நீங்கள் உங்களது மகளிடம் உரையாடலை தொடங்க இவை சில வழிகளாகும். Hamam இன் மதர் சேஃப்டி ஃபோர்ஸ் இல் இணைந்து அனைத்து குழந்தைகளும் பாதுகாப்புடன் வெளியே செல்ல உதவுங்கள்.


No comments:

Post a Comment

Please Comment