பங்களிப்பு ஓய்வூதிய திட்ட வட்டி 8 சதவீதமாக உயர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட வட்டி 8 சதவீதமாக உயர்வு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக் கான வட்டி வீதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் அதற் குப்பின் அரசுப் பணியில் சேர்ந்த வர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (புதிய பென்சன் திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


10 சதவீதம் பிடித்தம்
இதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி தொகையில் 10 சதவீதம் பிடித் தம் செய்யப்படும். அந்த தொகை பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக் கில் (சிபிஎஸ்) செலுத்தப்படும். இதே அளவு தொகையை அரசு தனது பங்காக சிபிஎஸ் கணக்கில் செலுத்தும். தற்போது சிபிஎஸ் தொகைக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.


அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது சிபிஎஸ் கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 60 சதவீதம் வழங்கப்படும். எஞ்சிய 40 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதில் கிடைக்கும் தொகை அவர்களுக்கு ஓய்வூதியமாக அளிக்கப்படும்.



இந்நிலையில், சிபிஎஸ் தொகைக்கான வட்டி உயர்த்தப் பட்டுள்ளது. இதுதொடர்பாக நிதித் துறைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சிபிஎஸ்-க்கான வட்டி வீதம் 7.6 சதவீதமாக இருந்தது. சமீபத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்- ‘ஜிபிஎப்’க் கான வட்டி வீதம் 8 சதவீதமாக உயர்ந்தது.
இதையடுத்து, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கான வட்டி வீதமும் 8 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டு, இது தொடர் பாக அரசாணையும் வெளியிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment