பயோ கெமிஸ்டிரி மாணவர்களை பிஎட் படிப்பில் சேர்க்கக்கூடாது: கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பயோ கெமிஸ்டிரி மாணவர்களை பிஎட் படிப்பில் சேர்க்கக்கூடாது: கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை உத்தரவு



பிஎஸ்சி பயோ கெமிஸ்டிரி மாணவர்களை பிஎட் படிப்பில் சேர்க்ககூடாது என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பிஎட் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிஎட் படிப்புக்கு 7 அரசுக் கல்லூரிகள், 14 அரசு உதவி கல்லூரிகள், 721 தனியார் கல்லூரிகளும் உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பு முடித்த ஏராளமான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த இடங்களுக்கு விண்ணப்பித்து பிஎட் படிப்பில் சேர்கின்றனர். இந்நிலையில் பிஎஸ்சி உயிர் வேதியியல்( பயோ கெமிஸ்டிரி) படித்த மாணவர்களை பிஎட் படிப்பில் சேர்க்க வேண்டாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக பதிவாளர் பிஎட் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 






அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: 

உயர்கல்வித்துறை சார்பில் 2017ம் ஆண்டு மே 5ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண்: 158படி பிஎட் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதில் 2018-19 மாணவர் சேர்க்கைக்காக அப்ளைட் கெமிஸ்டிரி படிப்பு மட்டுமே, வேதியியலுக்கு (கெமிஸ்டிரி) இணையானது என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வேறு எந்த பிரிவையும் பிஎஸ்சி கெமிஸ்டிரிக்கு இணையானதாக கருதி மாணவர் சேர்க்கை நடத்துமாறு குறிப்பிடவில்லை.
அதே போல் 2014ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி உயர்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அரசாணை எண்:72ல் வரிசை எண் 1 மற்றும் 15ல் பயோகெமிஸ்டிரி பாடப்பிரிவில் பிஎஸ்சி, எம்எஸ்சி ஆகிய படிப்புகள் கெமிஸ்டிரி படிப்பின் பிஎஸ்சி, எம்எஸ்சி படிப்புகளுக்கு இணையானதல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியிட்ட பள்ளி ஆசிரியர் நியமனத்துக்கான அறிவிப்பில், ெகமிஸ்டிரி ஆசிரியர் பணிக்கு கெமிஸ்டிரி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பயோ கெமிஸ்டிரி படிப்பு, கெமிஸ்டிரிக்கு இணையானதாக இல்லை என்பதால் அரசுப்பள்ளிகளில் பயோ கெமிஸ்டிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளின்படி கெமிஸ்டிரி, பயோ கெமிஸ்டிரி ஆகிய படிப்புகள் இணையானது என்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதுதொடர்பான இறுதி அரசாணையில், பயோ கெமிஸ்டிரியும், கெமிஸ்டிரியும் இணையானது அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




அதனால் பிஎஸ்சி பயோ கெமிஸ்டிரி படித்த மாணவர்களை பிஎட் படிப்பில் சேர்க்க கூடாது. அவ்வாறு தவறாக மாணவர்களை சேர்த்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பாகாது. சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகங்களே ெபாறுப்பு ஆகும். இவ்வாறு ஆசிரியர் பல்கலை. பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment