புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'கஜ' என பெயரிடப்பட்டுள்ளது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயலானது சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு உள்ளது.





நவம்பர் 15-ம் தேதி இந்தப் புயல் கரையை கடக்கிறது. கடலூருக்கும், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே அது கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வட தமிழகத்தில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதுமட்டுமின்றி, இந்தப் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - வட தமிழகத்தை தாக்குமா கஜ புயல்?



இந்த புயல் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, 'கஜா' புயலா?. 'கஜ' புயலா? எவ்வாறு இதனை உச்சரிப்பது? என்ற குழப்பம் நீடித்தது. ஆனால், 'கஜ' என்றே இந்த புயலின் பெயரை உச்சரிக்க வேண்டுமாம்.

அப்புறம், 'புயலுக்கு இந்த மாதிரியெல்லாம் யார் பெயர் வைப்பது?' என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் உள்ளது. அதற்கான பதில் இதோ,


புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் ஏற்கெனவே பல மேலை நாடுகளில் இருக்கிறது. புயல்களை இனம் கண்டு கொள்ள எளிதாக இருப்பதற்காகவே இந்த நடைமுறை. அதற்கு முன்னால் புயல் கரையைக் கடக்கும் ஊரின் பெயர் அதற்கு சூட்டப்படும். ஆனால், சில சமயம் ஒரே ஊரில் இரண்டு புயல்கள் வரும். அதேபோல சில நாடுகளில் ஒரே சமயத்தில் மூன்று புயல்கள் ஒன்றாக வரும். அப்போதெல்லாம் அவற்றை வகைப்படுத்துவது இன்னும் கடினம். எனவே இந்த சிக்கல்களை தீர்க்கவே பெயர் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.



2004-ம் ஆண்டு சார்க் அமைப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை 8 நாடுகள் இணைந்து இந்தப் பெயர்களை வழங்கின. இந்தப் பெயர்கள் வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல்களில் ஏற்படும் புயல்களுக்கு சூட்டப்படும். ஒரு நாடு 8 பெயர்களை வழங்கவேண்டும். அப்படி தற்போது 64 பெயர்கள் இருக்கின்றன. இந்த 64 பெயர்களும் முடிவடைய இருக்கும் நிலையில், மீண்டும் அனைத்து நாடுகளும் இணைந்து என்ன செய்யலாம் என முடிவெடுக்கும்.


புயலின் பெயரானது சிறியதாக, எளிதாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அதேபோல எந்த மத, இன, நாட்டு பிரிவினைரையும் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. நம்முடைய மொழியில் வைக்கும் பெயரானது, மற்றொரு நாட்டின் மற்றொரு மொழியில் மோசமான அர்த்தங்களை தந்தால் அது நிராகரிக்கப்பட்டு விடும்.


இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை. அக்னி, ஆகாஷ், பிஜிலி, ஜல், லெஹர், மேக், சாகர், வாயு. இதேபோல மற்ற ஏழு நாடுகளும் பெயர்களை வழங்கியுள்ளன.

அதில், தற்போது வைக்கப்பட்டுள்ள 'கஜ' எனும் பெயர் தாய்லாந்து நாடு வழங்கிய பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - 'கஜ' புயலின் தீவிரத்தை உணர்த்தி கடலோர காவல்படை எச்சரிக்கை

No comments:

Post a Comment

Please Comment