அரசு பள்ளியில் தீபாவளி கொண்டாடிய ஆதிவாசி மாணவர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு பள்ளியில் தீபாவளி கொண்டாடிய ஆதிவாசி மாணவர்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில், ஆதிவாசி பழங்குடியின மாணவ, மாணவிகள் கலாச்சார நடனம் ஆடி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். 











ஆதிவாசி இன மக்கள் அதிகம் வசிக்கும் கூடலூர்.பந்தலூர் பகுதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது கிடையாது. ஆனால் இவர்களது குடியிருப்புகளை சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் தீபாவளி பண்டிகையை பட்டாசு, இனிப்பு மற்றும் புத்தாடைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். பொருளாதாத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள இவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த ஆண்டு தேவாலா பள்ளியில் தீபாவளியை கொண்டாட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். இதன்படி தீபாவளி தினமான நேற்று முன்தினம் கலாச்சார உடை அணிந்து பாரம்பரிய இசை முழங்க ஆதிவாசி இன மாணவ, மாணவிகள் நடனமாடியும் மத்தாப்புகளை சுற்றியும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதில் கலந்து கொண்ட ஆதிவாசி இன மாணவ மாணவியகள் இனிப்பு, முத்து மாலைகள், பட்டாசுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. 











நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி கீதா, மேலாண்மை குழு தலைவர் தர்சினிதேவி மற்றும், காளிமுத்து, ஜெயகுமார், மகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Please Comment