அமெரிக்காவில் உள்ள, ஹார்வர்டு பல்கலை மாணவர் சங்க தலைவராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஸ்ருதி பழனியப்பன், தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில், மதிப்புமிக்க கல்வி நிறுவனமான, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில், இளங்கலை பிரிவு மாணவர் சங்க தேர்தல், சமீபத்தில் நடந்தது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஸ்ருதி பழனியப்பன், 20, தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவர், 42 சதவீத ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். இவரது பெற்றோர், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர்கள்.அமெரிக்காவைச் சேர்ந்த, ஜூலியா ஹியூஸா, 20, துணை தலைவராக, தேர்தெடுக்கப்பட்டார். ஸ்ருதியின் பெற்றோர், 1992 முதல், அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
Please Comment