சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வரும் வீடியோ ஒன்றில், பின் நம்பர் போடாமலேயே ஒருவரது டெபிட் கார்டிலிருந்து பணம் எடுக்க முடிவதாகக் கூறுவது சாத்தியமா என்பது குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ‘பாயின்ட் ஆப் செல்லிங்’ (பிஓஎஸ்) என்ற கருவி மூலம் ஒருவரது டெபிட் கார்டில் இருந்து பின் நம்பரை பதிவு செய்யாமலேயே பணம் எடுப்பது போன்று காட்சி பதிவாகி யுள்ளது. அத்துடன், பேன்ட் பாக் கெட்டில் மணிபர்சுக்கு உள்ளே வைத்திருக்கும் கார்டை வௌியே எடுத்து பிஓஎஸ் கருவியில் வைத்து தேய்ப்பதற்கு (ஸ்வைப்) பதிலாக, பிஓஎஸ் கருவியை டெபிட் கார்டு வைக்கப்பட்டுள்ள பேன்ட் பாக்கெட் அருகில் எடுத்துச் சென்றாலே அவரது கார்டில் இருந்து பணம் எடுக்கப்படுவதாக அந்த வீடியோவில் காட்சி இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு பின் நம்பர் இன்றி ஒருவரது கார்டில் இருந்து பணம் எடுக்க முடியுமா? என்பது குறித்து வங்கி அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, “பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு மின்னணு பரிவர்த் தனையை அதிக அளவில் ஊக்கப்படுத்தி வருகிறது. இத னால், தற்போது நூற்றுக்கு 80 சதவீத பணப் பரிவர்த்தனைகள் மின்னணு முறையில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் தாங்கள் மின்னணு முறையில் மேற்கொள் ளும் பணப் பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக வங்கிகள் தரப்பில் இருந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சி நம்பகத் தன்மையற்றதாக உள்ளது என்றார்.
இதுகுறித்து, எல்டி சாப்ட்வேர் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன மூர்த்தி என்பவர் கூறும்போது, “ப்ரீபெய்டு கார்டில் மட்டும்தான் பின் நம்பர் போடாமலேயே அதில் இருந்து பணம் எடுக்க முடியும். அதுவும் கூட அதிகபட்சமாக ரூ. 2 ஆயிரம் வரைதான் எடுக்க முடியும்.
மேலும், ஒருவர் தனது டெபிட், கிரெடிட் கார்டுகளில் பின் நம்பரை போடாமலேயே பணம் எடுக்கும் வசதியை தேர்வு செய்தால் கூட அதை வங்கிகள் அனுமதிக்காது. காரணம், ரிசர்வ் வங்கியின் விதிகள் மிகவும் கடுமையாக உள்ளன. எனவே, இதுபோன்ற மோசடிகள் நிகழ்வதற்கு முன்பே அதைத் தடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், ஒருவர் தனது பாக்கெட்டில் இத்தகைய ப்ரீபெய்டு கார்டு வைத்திருக்கும்போது, யாரும் அவருக்குத் தெரியாமல் அவர் அருகில் பிஓஎஸ் கருவியை கொண்டு சென்று பணம் எடுக்க முடியாது. எனவே, வீடியோவில் காண்பிப்பது போன்று அவ்வளவு எளிதில் வந்து பணத்தை எடுக்க முடியாது.
இன்றைய காலகட்டத்தில் இணையதளம் மூலம் நாம் மேற் கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த் தனைக்கும் நமது செல்போனுக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய ரகசிய எண்ணைப் (ஓடிபி) பயன்படுத்திதான் பரிவர்த்த னையை மேற்கொள்ள வேண்டி யுள்ளது. எனவே, அத்தகைய பாது காப்பு அம்சங்கள் கடைப் பிடிக்கப் பட்டு வரும் வேளையில் இந்த வீடியோவில் இடம் பெறும் காட்சி களைக் கண்டு பொதுமக்கள் அச் சப்படத் தேவையில்லை” என்றார்.
No comments:
Post a Comment
Please Comment