தற்போது உள்ள பெரும்பாலான உணவு பொருட்களில் கலப்படம் என்பது மிக எளிதாக மாறிவிட்டது. அதன் படி எந்த பொருளை எடுத்தாலும் கலப்படம் என்ற பயத்துடனே சுதாகரித்து வாங்கவேண்டியுள்ளது.
நாம் எந்த விதமான முன்னெச்சரிக்கையுடன் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினாலும் அதில் கலப்படம் உள்ளது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் தேன் பொருட்களில் கலப்படம் இருப்பதாக தகவல் வந்தது. தேனில் சுத்தமான தேனை கண்டறியும் முறையை அனைவரும் அறிவோம்.
அந்த வகையில் தற்போது வந்துள்ள நெய் பிரச்சனைக்கு சுத்தமான நெய் எது என்பதை எவ்வாறு கண்டறிவது என்பதை காண்போம்.
நெய்யுடன் - உருளைக்கிழங்கு:
நெய் பொருட்களுடன் உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய முதலில் அயோடின் சொலுஷனை எடுத்துக்கொள்ளவும். பின்னர் எடுக்கப்பட்ட நெய்யில் இந்த அயோடின் சொலுஷனை ஊற்றும் போது நெய் நீலநிறமாக மாறினால் அது கலப்பட நெய் அல்லது நெய்யுடன் உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்டது கண்டறியப்படும்.
நெய்யுடன் - வெஜிடபிள் ஆயில்:
நெய் பொருட்களுடன் வெஜிடபிள் ஆயில் சேர்க்கப்பட்டு உள்ளதா? என்று கண்டறிய ஒரு சோதனை குவளையில் சிறிதளவு நெய்யை எடுத்துக்கொண்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து குலுக்கும் போது அந்த கலவையானது சிவப்பு நிறமாக தோற்றமளித்தால் அது கலப்பட நெய் என்பது உறுதி செய்யப்படும்.
நெய்யுடன் - தேங்காய் எண்ணெய்:
நெய் பொருட்களுடன் தேங்காய் எண்ணெயானது சேர்க்கப்பட்டு உள்ளதா? என்று கண்டறிய நெய்யை பாத்திரம் ஒன்றில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து., சிறிது நேரம் கழித்த பின்னர் சென்று சோதித்தால் அந்த கலவையானது இரண்டாக பிரியும்., இதன் மூலமாக கலப்பட நெய் உறுதி செய்யப்படும்.
இந்த ஆய்வுகளில் இருந்து நாம் உபயோக படுத்திய நெய்யானது தப்பிக்கும் பட்சத்தில்., அது நல்ல சுத்தமான நெய் என்பது உறுதி செய்யப்படும்.
No comments:
Post a Comment
Please Comment