கருவிகளை பயன்படுத்தும் காகங்கள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கருவிகளை பயன்படுத்தும் காகங்கள்!



காகங்கள் புத்திசாலிகள் என்பது காலங்காலமாகத் தெரிந்தது தான். மரத்தின் இடுக்குகளில் இருக்கும் புழுக்களை குச்சி மூலம் வெளியே எடுத்து உண்பது; வீசப்பட்ட தண்ணீர் பாக்கெட்டில் காலால் மெட்டியபடி மீதமுள்ள நீரை குடிப்பது; தெருக் குழாயை காலால் திறந்து தண்ணீர் குடிப்பது. இப்படி எளிய கருவிகளை பயன்படுத்தும் திறன் காகத்திற்கு உண்டு.









ஆனால், காகங்களை வைத்து ஆராய்ச்சி செய்து வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அவை சிக்கலான கருவிகளையும் கையாளக் கற்றுக்கொண்டுள்ளன என்பதை அண்மையில் கண்டறிந்து உள்ளனர்.சோதனைகளின் போது, சில சிறிய குழாய்கள், குச்சிகள் ஆகியவற்றை இணைத்து நீண்ட குச்சியாக உருவாக்கி, அதை வைத்து சற்று எட்ட வைக்கப்பட்டிருக்கும் உணவை எடுத்து அவை உண்ணக் கற்றுக் கொண்டதை கண்டு, ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்து உள்ளனர்.காகங்களுக்கும், அவற்றின் இனத்தைச் சார்ந்த சில பறவைகளுக்கும், புதிய பொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்று கற்பனை செய்து பார்க்கும் திறன் இருக்க வேண்டும் என, ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment