தண்ணீரில் பயணிக்க உதவும் மிதவை சைக்கிள் மேட்டூர் மாணவர்கள் சாதனை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தண்ணீரில் பயணிக்க உதவும் மிதவை சைக்கிள் மேட்டூர் மாணவர்கள் சாதனை

மேட்டூர் அணையை ஒட்டி காவிரி கரையோரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் நீரில் செல்லும் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.




சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள கொளத்தூர் காவேரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தமிழ்க்குமரன் (18). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு (மோட் டார் மெக்கானிக்) படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் குணசேகரன் (18). இவர் மற்றொரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு (இசிஇ) பயின்று வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.




இதுகுறித்து தமிழ்க்குமரன் கூறிய தாவது: பழைய சைக்கிளில் வாட்டர் கேன்களை பொருத்தி மிதவை சைக்கிள் உருவாக்க முயன்றோம். அது சரியாக வரவில்லை. அதன் பின்னர் பழைய சைக்கிளில் 2 சக்கரங்களையும் கழற்றி விட்டு முன்சக்கரத்துக்கு பதிலாக நீள மான இரும்பு ஆங்கிளில் வைத்து வெல் டிங் செய்ததுடன், சைக்கிளின் பின்சக் கரத்துக்கு பதிலாக கம்ப்ரசர் ஃபேனை பொருத்தினோம். சைக்கிள் அமைப்பை ஒரு இரும்பு ஆங்கிளில் நிற்கும் வகையில் வெல்டிங் செய்தோம்.


இந்த அமைப்பின் பக்கவாட்டில் தலா 2 பிவிசி பைப் துண்டுகளை பொருத்தினோம். இருபுறத்திலும் உள்ள பிவிசி பைப்புகளின் உள்ளே மொபெட்டின் டியூப்பை வைத்து, அவற்றில் காற்றை நிரம்பினோம். பின்னர் பிவிசி பைப்புகளின் இருபுற மும் மூடிபோட்டு மூடிவிட்டோம். பிவிசி பைப்பின் இருமுனைகளிலும் மூடிபோட்டு மூடிவிட்டாலே அது தண்ணீ ரில் மிதக்கும். எனினும், பைப் உடைந்துவிட்டால் ஆபத்து நேரிடாமல் தடுக்க, அதனுள்ளே காற்றடைத்த டியூப்பையும் வைத்தோம்.



இந்த சைக்கிள் 60 கிலோ எடையைத் தாங்கிக் கொண்டு நீரில் மிதக்கும். நாம் பெடல் செய்தால் தரையில் ஓடுவதுபோல தண்ணீரில் சைக்கிள் ஓடும். என்னுடைய அப்பா (பழனிசாமி) லாரி பாடி கட்டும் பட்டறை வைத்திருப்பதால், அதுதொடர்பாக வெல்டிங் உள்ளிட்ட பணிகள் ஓரள வுக்கு தெரியும். அந்த அனுபவத்தைக் கொண்டு மிதவை சைக்கிளை எளிதாக உருவாக்க முடிந்தது. நானும் குணசேகரனும் ஒரு மாதமாக சிந்தித்து இதனை உருவாக்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.


மிதவை சைக்கிளை காவிரி ஆற்றில் மாணவர்கள் இயக்கிக் காட்டியபோது, கிராம மக்கள் அனைவரும் ஆச்சரியத் துடன் பார்த்தனர். இந்த சைக்கிளை உருவாக்க ரூ.3 ஆயிரம் செலவானதாக மாணவர்கள் இருவரும் கூறியதோடு, மிதவை சைக்கிளுக்கு மொபெட் இன்ஜினைப் பொருத்தி மிதவை மோட்டார் சைக்கிள் உருவாக்கும் அடுத்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக இருவரும் கூறினர்.



படிக்கும் வயதில் எளிமையான பொருட்களைக் கொண்டு பாதுகாப் பான மிதவை சைக்கிளை உருவாக்கிய தமிழ்க்குமரன், குணசேகரன் ஆகி யோரை சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment