வாட்ஸ் ஆப்பில் வருகிறது புதிய சேவை! நிறுவனங்கள் மகிழ்ச்சி; பயனாளிகளுக்கு அதிர்ச்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வாட்ஸ் ஆப்பில் வருகிறது புதிய சேவை! நிறுவனங்கள் மகிழ்ச்சி; பயனாளிகளுக்கு அதிர்ச்சி

இன்று உலகளவில் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயலியாக வாட்ஸ் ஆப் இருந்து வருகிறது. இதுவரை வாட்ஸ் ஆப்பில் எந்த விளம்பரங்களும் ஒளிப்பரப்பியது இல்லை. ஆனால் விரைவில் இந்த செயலியில் உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் பதிவிடப்படும் என வாட்ஸ்-ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.






4 வருடங்களுக்கு முன்பு வாட்ஸ்-ஆப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது. ஆனால் இதுவரை எந்த வருமானமும் இன்றி இலவசமாகவே சேவை செய்து வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் முதன்மை செயல் அலுவலர் மார்க் சுக்கர்பெர்க் வாட்ஸ்-ஆப் மூலம் வருமானம் பெற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.


இதுகுறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ள தகவலில் "வாட்ஸ்-அப் செயலியின் ஸ்டேடஸ் பகுதியில் நாங்கள் விளம்பரத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த முடிவானது எங்கள் நிறுவனத்திற்கு முதன்மை வருமானத்தையும் மற்ற நிறுவனங்கள் அவர்களுடைய விளம்பரங்களை வாட்ஸ் அப்பில் பதிவிட வாய்ப்பையும் அளிக்கும்" என தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் உலகம் முழுவதும் 1.5 பில்லியன் வாடிக்கையாளர்களையும் இந்தியாவில் மட்டும் 250 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.


இதன் மூலம் நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரித்துக்கொள்ள நல்ல வாய்ப்பு அமைகிறது. அதே சமயம் இத்தனை நாட்கள் எந்த விளம்பரமும் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்திய பயனாளர்களுக்கு சற்று எரிச்சலாகவும் இருக்க கூடும்.
இந்த சேவை எப்பொழுது முதல் அறிமுகமாகிறது என்பதனை இன்னும் உறுதி செய்யவில்லை. பெரும்பாலும் அடுத்த ஆண்டு முதல் இந்த சேவை அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment