ஆன்லைனில்' ஆசிரியர் பயிற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆன்லைனில்' ஆசிரியர் பயிற்சி


ஆசிரியர் பயிற்சியை, 'ஆன் லைன்' எனப்படும் இணையம் மூலம் பெறும் வகையில், 'கூல்' என பெயரிடப்பட்டு உள்ள, திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.





கேரளா மாநிலத்தில் கல்வி முறையை முழுவதும், 'டிஜிட்டல்' மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.இதற்கான திட்டங்களை, 'கைட்' எனப்படும், கேரள கல்வியியல் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது, கூல் எனப்படும், ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:ஆசிரியர் பயிற்சி பெறுவோர், 45 மணி நேர கம்ப்யூட்டர் பயிற்சியை பெறுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந் நிலை யில், கூல் எனப்படும் ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்ய உள் ளோம். இந்த பயிற்சியில், ஆசிரியர்கள், மாணவர் கள், பொதுமக்களும் பங்கேற்கலாம். முதல்கட்ட மாக, ஆசிரியர்களுக் கான பயிற்சி வகுப்புகள், அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளன. இந்த பயிற்சியில் சேருவதற்கு, 5,000ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.முதல்கட்டமாக, 2,500 பேருக்கு, ஆறு வார பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.இந்த பயிற்சி வகுப்பில், அடிப்படை கம்ப்யூட்டர் பயன்பாடு, படங்களை திருத்துவது, வீடியோவை திருத்துவது, மலையாளத்தில், 'டைப் பிங்' செய்வது, இன்டர்நெட் பயன்படுத்துவது, கல்வியியல் தொடர்பான இணைய பக்கங் களை எப்படி பயன்படுத்துவது போன்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பயிற்சியை மேற்கொள் வோருக்கு, சான்றிதழ் அளிக்கப்படும்.

அடுத்த கட்டமாக, மாணவர் கள், பொதுமக்களுக்கான பயிற்சி திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Please Comment