அரசுப் பள்ளிகளில் ஏன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வழங்கு கூடாது? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசுப் பள்ளிகளில் ஏன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வழங்கு கூடாது? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி


அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சியை ஏன் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது தமிழகத்தில் அரசு தமிழ்வழி பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்த கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மனு தாக்கல் செய்திருந்தார் தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும் 12,419 தனியார் பள்ளிகளும், 8403 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளதாகவும் இந்த பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்கள் பயின்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 80 லட்சம் மாணவர்கள் தமிழ்வழி கல்வி பெற்றுவரும் நிலையில் ஆரம்ப கல்வி முதல் 12ம் வகுப்பு வரைக்கும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் போட்டி தேர்வுகளில் ஆங்கில புலமை இல்லாததால் அவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தமிழ்வழி கல்வியில் படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் மற்ற தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத சூழல் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்த தமிழகத்தில் அரசு தமிழ்வழி பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சியை ஏன் வழங்கக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 








அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள சிரமப்படுகின்றனர் என்றும், போட்டித் தேர்வுகளில் கேரளா, ஆந்திர மாணவர்களே தமிழகத்தை விட முன்னிலை வகிக்கின்றனர் என்றும் நீதிபதி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தமிழ்வழி பள்ளிகளிலும் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளை தொடங்குவது குறித்து டிச., 6ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கிலப் பேச்சு பயிற்சியை வழங்கலாம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்களின் நலன்கருதி தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment