சித்தா, ஆயுர்வேதா படிப்புகளில் ஆர்வம் காட்டாத மாணவர்கள் சென்னையில் நாளை கலந்தாய்வு தொடங்குகிறது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சித்தா, ஆயுர்வேதா படிப்புகளில் ஆர்வம் காட்டாத மாணவர்கள் சென்னையில் நாளை கலந்தாய்வு தொடங்குகிறது

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட 5 ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு 2 முறை விண்ணப்ப விநியோகம் செய்தும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டாத நிலையில், நாளை கலந்தாய்வு தொடங்குகிறது.


ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர் வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு தமிழக அரசு 3 முறை கடிதம் எழுதியும், மத்திய அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.



இந்நிலையில், ஆயுஷ் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு மூலம் நடக்குமா, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக் குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. விண்ணப்ப விநியோகம் தொடங்கு வதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை இந்த குழப்பம் நீடித்தது. ஆயுஷ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடக்கும் என்று கடைசி நேரத்தில் தமிழக அரசு அறிவித்தது.



இதையடுத்து, ஆயுஷ் படிப்பு களுக்கான விண்ணப்ப விநியோ கம் தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்று அறிவித் தும், விண்ணப்பம் வாங்க மாணவர் கள் ஆர்வம் காட்டவில்லை. விண் ணப்ப விநியோகம் முடிந்து பரிசீல னைக்கு பின்னர் குறைந்த அளவு மாணவர்களே தரவரிசைப் பட்டிய லில் இடம்பெற்றனர். இதனால், மீண் டும் விண்ணப்ப விநியோகம் நடந் தது. ஆனபோதிலும், சொற்ப மாணவர் களே விண்ணப்பம் வாங்கினர்.


பின்னர், 3,566 பேருக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 6,500-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்ற நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை பாதியாக குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற் படுத்தியது.


இந்நிலையில், ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. இதுகுறித்து இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:


சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட 5 ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு 6 அரசுக் கல்லூரிகளில் 390 இடங்கள், 26 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,110 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் 19-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடக்கிறது.


இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடக்குமா, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்குமா என்ற குழப்பம் கடைசி வரை நீடித்தது. விண்ணப்ப விநியோகத்திலும் தாமதம் ஏற்பட்டது. விண்ணப்பங்கள் குறைய இதுவே காரணம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment