ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதன் முறையாகச் சர்வதேச ரோமிங் 4ஜி வோல்ட் சேவையினை வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. பிற உலக நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் வோல்ட் மொபைல் சேவைப் பயனாளிகளுக்கு ரிலையன்ஸ் ரோமிங் சேவையினை வழங்கும். அதே போன்று ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் சர்வதேச ரோமிங் செல்லும் போது அங்கு உள்ள நெட்வொர்க்குகளுடன் ஜியோ இணைந்து 4ஜி சேவையினை வழங்கும்.
ஜப்பான் நிறுவனம்
ஜப்பானைச் சார்ந்த கேடிடிஐ நிறுவனம் முதன் முறையாக ஜியோ உடன் இணைந்து சர்வதேச ரோமிங் வோல்ட் சேவையினை வழங்க உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவில் 4ஜி வோல்ட் சேவையினை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெயரினை ரிலையன்ஸ் ஜியோ பெற்றுது. இதனைத் தொடர்ந்து தான் ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் வோல்ட் சேவையினை இந்தியாவில் அறிமுகம் செய்தன.
வொல்ட் சேவை அளிக்கும் நாடுகள்
அமெரிக்கா, கனடா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், யூஏஈ, நெதர்லாந்து, இந்தியா உட்பட 187 நாடுகளில் மொபைல் போன்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் வோல்ட் சேவையினை வழங்குகின்றன.
சர்வதேச ரோமிங்
தற்போது ரிலையன்ஸ் ஜியோ ஜப்பானின் கேடிடிஐ கார்ப்ரேஷன் உடன் இணைந்து 4ஜி வோல்ட் ரோமிங் சேவையினை வழங்க இருப்பது உறுதியான நிலையில் பிற நாட்டு டெலிகாம் நிறுவனங்கள் குறித்த ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ சிறந்த இணையதளத் தரவு மற்றும் குரல் அழைப்பு சேவைகளை வழங்க பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது. கேடிடிஐ வாடிக்கையாளர்கள் இந்தியாவில் ஜியோ சர்வதேச சேவையினைப் பெற வரவேற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா
இந்தியாவில் 4ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்குவதில் முதன்மையான நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
உலக அங்கிகாரம் பெற்ற ஜியோ
உலகளவில் 9-ம் மிகப் பெரிய வாடிக்கையாளர்கள் அளவினை கொண்ட நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ என்றும் தற்போது 252 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
No comments:
Post a Comment
Please Comment