வீரதீர செயல்கள் புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருதுபெற விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வீரதீர செயல்கள் புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருதுபெற விண்ணப்பிக்கலாம்


சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பாடுபட்டவர்கள் மாநில விருது பெற நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.




தமிழக அரசு சமூக நலம் சத்துணவுத் திட்டத்துறை மூலம் வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. 



அதன்படி, ஆண்டுதோறும் மேற்கண்ட சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன. 24) பாராட்டு பத்திரமும், ரூ. 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. ஜனவரி 2019-இல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதுக்குள்பட்ட (31 டிசம்பர் 2018-ன் படி) தகுதியான பெண் குழந்தைகள் நவ. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



விருதுக்கான விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்துக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் சிறந்த பெண் குழுந்தை தேர்வு செய்யப்பட்டு, 24.1.2019- இல் மாநில விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment