டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது இன்கம்மிங் கால்ஸ் எனப்படும் உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும். அதிலும் இந்திய டெலிகாம் துறை ஜியோ வணிகச் சேவை தொடங்கிய பிறகு கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய மாற்றத்தினைச் சந்தித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் துறையில் மிகப் பெரிய புரட்சியைச் செய்த நிலையில் இணையதளத் தரவு மிகப் பெரிய அளவில் குறைந்த விலைக்கு அளிக்க வித்திட்டது. அது மட்டும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் அளித்தது.
வருவாய் இழப்பு
மொபைல் போன் பயனர்களுக்குக் குறைந்த விலையில் இணையதளத் தரவு கிடைத்தாலும் டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் அதனால் பெரிய அளவில் பாதிப்படைந்தது.
கிராமப்புற மொபைல் போன் பயனர்கள்
மறுபக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் பலர் இதுவரை மொபைல் போனை உள்வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது 10 ரூபாய் ரீசார்ஜ் செய்தாலும் பெரியதாக அவர்களிடம் இருந்து வருவாய் ஈட்ட முடியவில்லை. இதனால் தனிநபர் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வந்த வருவாயும் பாதிப்படைந்தது. எனவே அவர்களிடம் இருந்து எப்படி வருவாயினை ஈட்டுவது என்றும் தற்போது டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
உள்வரும் அழைப்புகளுக்குக் கட்டணம்
அதன் படி டெலிகாம் நிறுவனங்கள் உள்வரும் அழைப்புகளுக்குக் கட்டணத்தினை வசூலிக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. ஆம். இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால் இதனை டெலிகாம் நிறுவனங்கள் கண்டிப்பாகச் செய்யும் என்று கூறப்படுகிறது.
வோடாபோன் மற்றும் ஏர்டெல்
வோடாபோன் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட சில முக்கிய டெலிகாம் நிறுவனங்கள் இதற்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
ஏர்டெல் ரீரார்ஜ் திட்டம்
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு உள்வரும் அழைப்புகளை இலவசமாகப் பெற முடியும் மற்றும் 26 ரூபாய் டாக் டைம் மற்றும் 100 எம்பி இணையதளத் தரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்று ஏர்டெல் நிறுவனம் 35 ரூபாய், 65 ரூபாய் மற்றும் 95 ரூபாய் என மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள்
டெலிகாம் நிறுவனங்கள் எப்போது முதல் இந்தத் திட்டங்களை முழுமையாக அமலுக்குக் கொண்டு வரும் என்பது மொபைல் போன் வாடிக்கையாளர்களிடம் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment