Laptop - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Laptop

லேப்டாப் முறைகேடுக்கு முற்றுப்புள்ளி மாணவர் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், லேப்டாப் உட்பட, 14 வகை நல திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.இதில், இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை, அரசு பள்ளி மாணவர்கள்; அரசு உதவி பள்ளியில் படிக்கும், அரசு உதவி பெறும் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், 2011ல் துவங்கியது.

ஏழு ஆண்டுகளில், 30 லட்சம் சைக்கிள் மற்றும் லேப்டாப்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.அவற்றில், பல பள்ளிகளில், லேப்டாப்கள் வாங்க வராத மாணவர்களின், லேப்டாப்களை, அவர்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டி, பள்ளி நிர்வாகத்தினர் எடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, முறைகேடுகளை தடுக்க, பள்ளிக் கல்வி துறை, புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், ஏழு ஆண்டுகளாக வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர் விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.அதேபோல, மூன்று கல்வி ஆண்டுகளில், இலவசம் பெற்ற மாணவர்களின் ஆதார் எண்களையும் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

Please Comment