பரிசு ரூ.1,000 வழங்க அனுமதி அரசின் வேண்டுகோளை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பரிசு ரூ.1,000 வழங்க அனுமதி அரசின் வேண்டுகோளை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு



சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தான் என்பதால் அவர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். 







 பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.அரசின் கடன் சுமை அதிகமாக இருப்பதால் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கக் கூடாது என்று கூறி டேனியல் ஜேசுதாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வசதிபடைத்த சர்க்கரை கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க தடை விதித்து உத்தரவிட்டது. கூடுதல் மனு தாக்கல் இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. 







தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், ‘அரிசி நீங்கலாக சர்க்கரை உள் ளிட்ட பொருட்கள் (என்பிஎச்எச்-எஸ்) பெறும் சர்க்கரை கார்டுதாரர்களில் பெரும் பாலானோர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களே. தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே 4 லட் சத்து 12 ஆயிரத்து 558 சர்க்கரை கார்டு தாரர்கள் ரூ.1,000 வாங்கி விட்டனர். 






இந்தத் தொகை கிடைக்காத மீதமுள்ள சர்க்கரை கார்டுதாரர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். எனவே, அவர்களுக்கும் இந்த தொகையை வழங்க அனுமதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜ மாணிக்கம் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் அரசு பிளீடர் மனோகர் ஆகியோர் ஆஜராகி, ‘‘சர்க்கரை கார்டுதாரர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான். அரிசிக்கு பதிலாக சர்க்கரை கூடுதலாக கிடைக் கும் என்பதால்தான் அவர்கள் அரிசி வேண்டாம் எனக்கூறி சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பெற்று வருகின்றனர். 




மேலும் சர்க்கரை கார்டுதார்களில் ஏற்கெனவே 40 சதவீதம் பேருக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டு விட் டது’’ என்றனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.மனோகரன், ‘‘ரூ.1000 பரிசுத்தொகை என்பது திருமங்கலம் பார்முலாபோல உள்ளது. உரியவர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்க வேண்டும்’’ என வாதிட்டார். 







 அரிசிக்கு குறைந்தபட்ச விலை இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘பணத்தை நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டியது தானே. மக்களை 8 முதல் 10 மணி நேரம் வரை ஏன் காத்திருக்க வைக்கிறீர்கள்? ரூ.1,000 கிடைக்காவிட்டால் தேர்தலில் வாக்களிக்க மாட்டேன் என்ற நிலையை உருவாக்கியது யார்? இலவச திட்டத்தை அறிவிக்கும் முன்பாக பய னாளிகளை முடிவு செய்து தெளிவான வரையறையுடன் திட்டமிட வேண்டும். ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசி ஆந்திரா, கேரளாவுக்கு கடத்தப் படுகிறது. 






இலவசமாக வழங்குவதற்கு பதிலாக குறைந்தபட்ச விலையை நிர்ண யிக்கலாமே. அண்ணாவே ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்றுதான் அறிவித்தார். இன்னும் எத்தனை காலத்துக்குதான் இலவசம் இருக்கும். இனிமேலாவது இலவசங்களை வழங்க மாட்டோம் என முடிவு எடுங்கள். அப்போது தான் அதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முடியும்’’ என கருத்து தெரிவித்தனர். 




 மேலும், தற்போது 90 சதவீதம் கார்டு தாரர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு விட்டதால், இதுதொடர்பாக தடை பிறப்பித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. சர்க்கரை கார்டுதாரர்களில் பாதி பேர் வாங்கிவிட்டனர். மீதி பேருக்கு பணம் செல்லவில்லை என்ற அரசின் கோரிக்கையை கருத்தில் கொள்ள முடியாது. ஆனால் அவர்களிலும் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதை கருத்தில் கொண்டு, எஞ்சியவர்களுக்கும் ரூ.1,000 வழங்கும் வகையில் ஏற்கெனவே பிறப் பிக்கப்பட்ட தடை உத்தரவு மாற்றி யமைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  





கேவியட் மனு இதற்கிடையே இந்த திட்டத்துக்கு எதிராக யாரும் தடை கேட்டு வழக்கு தொடர்ந்தால், தங்களது விளக்கத்தை யும் கேட்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..



துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!



No comments:

Post a Comment

Please Comment