Xiaomi Redmi Note 7 : சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷியோமி நிறுவனத்தின் புதிய சுந்ததிரமான பிராண்டாக உருவாகியுள்ள ரெட்மி பிராண்டில் புதிய ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 48MP ரியர் கேமரா பெற்ற மாடலாக வெளியாகியுள்ளது.
சுந்ததிரமாக செயல்படும் மொபைல் நிறுவனமாக உருவெடுத்துள்ள ரெட்மி பிராண்டில் முதன்முறையாக வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே அம்சத்தை பெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்ட மொபைலாக சியோமி ரெட்மி நோட் 7 வெளியிடப்பட்டுள்ளது.
ரெட்மி தனி நிறுவனமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இதன் தலைவராக ஜியோனி நிறுவனத்தில் பணியாற்றி வில்லியம் லூ துனை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Redmi Note 7 Price, Specifications, Features
டிசைன் & டிஸ்பிளே
முந்தைய மெட்டல் டிசைனிலிருது ரெட்மி விடுபட்டு பின்புறத்தில் கிளாஸ் பெற்ற ரெட்மி நோட் 7 மொபைல் 6.3-inch முழு ஹெச்டி பிளஸ் டிஸ்பிளேவை 2.5D கர்வடு கிளாஸ் பாதுகாப்பை பெற்று இதன் ஆஸ்பெக்ட் விகிதம்19.5:9 மற்றும் 1080p தீர்மானத்தை கொண்டுள்ளது. நோட் 7 மாடல் நீலம், கருப்பு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.
பிராசஸர் & ரேம்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு இயக்குப்படுகின்ற நோட் 7 மாடலில் 3GB, 4GB மற்றும் 6GB ரேம் என மொத்தமாக மூன்று விதமான ரேம் மாறுபாட்டில் கிடைக்கின்றது. இதன் உள்ளடக்க மெமரி தேர்வு 3GB+32GB, 4GB+64GB மற்றும் 6GB+64GB என கிடைக்கின்றது. மேலும் கூடுதலாக சேமிப்பை அதிகரிக்க 256GB வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.
கேமரா
இந்த மொபைல் போனின் உச்சபட்ச வசதியாக பின்புறத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் இயங்கும் இரண்டு கேமராவை பெற்று 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டும் அமைந்துள்ளது. முன்புறத்தில் செல்பீ படங்களுக்கு 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி
ரெட்மி நோட் 7 மொபைலில் மிக விரைவாக சார்ஜிங் செய்யும் வகையில் குவால்காம் QuickCharge 4.0. உடன் கூடிய 4000mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.
மற்றவை
ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டில் முதன்முறையாக USB Type-C போர்ட் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, ப்ளூடூத் 5.0, GPS, GLONASS மற்றும் USB Type-C port ஆகியவற்றை பெற்றுள்ளது.
சீனாவில் வெளியிடப்பட்டுள்ள ரெட்மி நோட் 7 விலை பட்டியல் பின் வருமாறு;-
ரெட்மி நோட் 7 3GB+32GB - 999 Yuan (ரூ. 10,200),
ரெட்மி நோட் 7 4GB+64GB - 1199 Yuan (ரூ. 12,200)
ரெட்மி நோட் 7 6GB+64GB - 1399 Yuan ( ரூ. 14, 250)
இந்தியாவில் ரெட்மி நோட் 7 மொபைல் போன் பிப்ரவரி மாத தொடக்க வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment