வரலாற்றில் இன்று 14.01.2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரலாற்றில் இன்று 14.01.2019

ஜனவரி 14  கிரிகோரியன் ஆண்டின் 14 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 351 (நெட்டாண்டுகளில் 352) நாட்கள் உள்ளன.



நிகழ்வுகள்
1539 – ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
1690 – கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
1724 – ஸ்பெயின் மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.
1761 – இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
1784 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.



1814 – நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
1858 – பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
1907 – ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1913 – கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.
1932 – தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.



1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
1950 – சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1969 – ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1994 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
  1995 – சந்திரிகா அரசு – விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.


1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, “கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்” என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டது.
1998 – ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.
பிறப்புகள்
1920 – ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (இ. 2014)
1946 – க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)
1960 – ஜெ. வீரநாதன், தமிழக எழுத்தாளர்
1977 – நாராயண் கார்த்திகேயன், கார் பந்தய வீரர்
இறப்புகள்
1898 – லூயி கரோல் ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர் (பி. 1832)
1901 – சார்ல்ஸ் ஹெர்மைட், பிரெஞ்சு கணிதவியலர் (பி. 1822)
1957 – ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (பி. 1899)
1978 – கியோடல், ஆஸ்திரிய அமெரிக்க, கணித, மெய்யியல் அறிஞர் (பி. 1906)
2000 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)
சிறப்பு நாள்
    தைப்பொங்கல் – தமிழர் திருநாள் (ஜனவரி 14 அல்லது ஜனவரி 15, இந்து நாட்காட்டியின் படி)



    தமிழ்ப் புத்தாண்டு (2008 ஆம் ஆண்டிலிருந்து: ஜனவரி 14 அல்லது ஜனவரி 15, இந்து நாட்காட்டியின் படி)துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment